சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் மேலாளர், ஆடிட்டருக்கு அடி, உதை: கடன் கேட்டு கிடைக்காதவர் ஆவேசம்

Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை: கோவையில், வங்கிக்குள் புகுந்து, மேலாளர் மற்றும் ஆடிட்டரை கத்தி யால் குத்தி, பொம்மை துப்பாக்கியால் மிரட்டிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.கோவை, சோமையம் பாளையத்தைச் சேர்ந்தவர், வெற்றிவேலன், 44. ஒண்டிப்புதுாரில், மோட்டார் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலை அபிவிருந்தி செய்ய, 1 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டது.இதற்காக, ஆடிட்டரான, டாடாபாத்தைச் சேர்ந்த
 வங்கியில் மேலாளர், ஆடிட்டருக்கு அடி, உதை:  கடன் கேட்டு கிடைக்காதவர் ஆவேசம்

கோவை: கோவையில், வங்கிக்குள் புகுந்து, மேலாளர் மற்றும் ஆடிட்டரை கத்தி யால் குத்தி, பொம்மை துப்பாக்கியால் மிரட்டிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோவை, சோமையம் பாளையத்தைச் சேர்ந்தவர், வெற்றிவேலன், 44. ஒண்டிப்புதுாரில், மோட்டார் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலை அபிவிருந்தி செய்ய, 1 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டது.இதற்காக, ஆடிட்டரான, டாடாபாத்தைச் சேர்ந்த குணபாலன், 55, என்பவரை அணுகினார். சுங்கம் கனரா வங்கி தலைமை மேலாளர் சந்திர சேகர், 50, மூலம் கடனுதவி ஏற்பாடு செய்து தருவதாக, குணபாலன் உறுதியளித்தார். பொம்மை துப்பாக்கிகடந்த மார்ச் மாதம், வெற்றிவேலனை, வங்கி மேலாளரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.கடன் பெற, சொத்து மதிப்பு சான்றிதழ்களை இருவரும் வழங்கினர். அதை பெற்ற மேலாளர், சான்றிதழ்களை, சென்னை தலைமை அலுவலக ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.'சொத்து மதிப்பு குறைவாக இருப்பதால், 1 கோடி ரூபாய் கடன் வழங்க முடியாது' என, தலைமை அலுவலக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.இதற்கிடையே, 'சொத்து பத்திரம் கொடுத்து, பல மாதங்களாகியும் கடன் கிடைக்கவில்லை' என, குணபாலனிடம், வியாபாரி வெற்றிவேலன் தகராறு செய்துள்ளார். அவரை சமாதானம் செய்தவர், 'வங்கிக்கு சென்று விபரம் கேட்கலாம்' என, தெரிவித்தார்.

நேற்று முன்தினம், இருவரும் வங்கியில், மேலாளர் அறைக்கு சென்றனர். உள்ளே சென்ற வெற்றிவேலன், மறைத்து வைத்து இருந்த பொம்மை துப்பாக்கியால், குணபாலனை சுடுவது போல் மிரட்டினார். தொடர்ந்து, ஆடிட்டர் குணபாலன், மேலாளர் சந்திரசேகர் என, இருவரையும் கத்தி, பிளேடு ஆகியவற்றால் சரமாரியாக தாக்கினார்.பேனா கத்திஅதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர். உதவிக்கு ஓடி வந்த ஊழியர்களையும், வெற்றிவேலன் தாக்கினார். அனைவரும் சேர்ந்து, அவரை பிடித்து, ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து, மேலாளர் சந்திரசேகர் புகார் அளித்தார்.கொலை மிரட்டல், தாக்கு தல் உட்பட மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்து, வெற்றிவேலனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பேனா கத்தி, பொம்மை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.கமிஷன் காரணமா?வங்கி மேலாளர் சந்திரசேகர் கூறியதாவது:கடன் கேட்டு, மார்ச் மாதம் வெற்றி வேலன் விண்ணப்பித்தார். மூன்று மாதங் களிலேயே, அவர் கேட்ட அளவுக்கு கடன் கிடைக்காது என சொல்லி விட் டோம். இருந்தும், 'மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்' என அவர் தான் சொன்னார். இதனால் தான், மீண்டும் முயற்சி செய்தோம்.குணபாலன், எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்; அவர், இதுபோன்று கடன் கேட்பவர்களை அறிமுகம் செய்து வைப்பார். ஆனால், அவர் அறிமுகம் செய்து வைத்த காரணத்துக்காக மட்டுமே கடன் வழங்குவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

போலீஸ் விசாரணையில், ஆடிட்டர் குணபாலன், கடன் வாங்கி தருவதாக, 3 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதாக, வெற்றிவேலன் தெரிவித்துள்ளார். கடன் கிடைக்காமல் போனதால் ஆத்திரமடைந்தவர், தற்கொலை முடிவு எடுத்து, அதற்கு முன் இருவரையும் தாக்க திட்டமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-டிச-201914:37:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னாத்துக்கு இவன் கடன் வாங்கறதுக்கு புரோக்கரை நாடினான் என்று தெரியுமா? நேர்மையான முறை என்றால் நேராகவே அணுக வேண்டும் கடன் வாங்கறது ப்ரோக்கர் சொன்னான் ஏறுகோடி ரூபாய் கடன் என்று வந்து நின்னால் இந்த நாய்களெல்லாம் வட்டியும்கூட காட்டாமல் போடுவாங்க சாமி இதுலே இவ்ளோ பிராடுக்கும் மேல மானேஜருக்கு கத்திக்குத்து எரிச்சலா வரதுங்க பயமாயிருக்கு எவனையும் பார்க்கவே நகை மாற்றப்போனால் பிராடு பண்ரான்னுக ஏமாத்துறானுக வெட்கமேயில்லாமல் அதனால்தான் இந்தமாதி ஏமாற்றுக்காரனுகளுக்கெல்லாம் கூன் குருடு செவிடு ஊமை என்று ஹாண்டிகேப்ட்டு குழந்தைகளே பொறக்குது அன்று ஆன்றோர் சொன்னது கரெக்டுங்க நாம் ஒருவனை ஏமாற்றினால் நம்மளை தெய்வம் ஏமாற்றும் என்று ஆனால் பணவெறிபிடிச்சுத்திரியும் எல்லா மனுஷனும் ஒருநாள் தெருவுலேதான் நீக்கவேண்டும் நடக்கும் பாருங்க பிகாஸ் இதுகலிகாலம்
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
05-டிச-201909:01:43 IST Report Abuse
Ramesh Sundram நல்ல வேளை இவர் அமைதி மார்கத்தை சேர்ந்தவர் இல்லை இருந்திருந்தால் இந்நேரம் நமது ஊடகங்கள் காது கிழிய கதறி இருப்பார்கள்
Rate this:
Cancel
adithyan - chennai,இந்தியா
05-டிச-201906:21:15 IST Report Abuse
adithyan இப்போதுள்ள நடைமுறையில் மானேஜர் ஒரு ப்ரோகேர் மூலம் தான் கடனுக்கு வருபவரை காண்கிறார். காரணம் கடனில் கமிஷன் பெற. அதன்பின் தகுமோ தகுதி இல்லையோ தகுதி உண்டு என்று மேல் அலுவலகத்துக்கு தன் சிபார்சுடன் அனுப்பி வைக்கிறார். மாற்றாக சொத்துக்கு ஏற்றவாறு கடன் அளவை மாற்றிக்கொள்ள மேனேஜர் ப்ரோகேரிடம் சொல்கிறார். அதே மாதிரி நடக்கிறது. கடன் கிடக்கிறது. மானேஜர், புரோக்கர், கடன்வாங்குபவர்கள் அனைவரும் சொஸ்தமாக சந்தோஷ படுகிறார்கள். கடன், அந்தோ பரிதாபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X