சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 கிலோ நகையை, 'அமுக்கிய' போலீசார்: கொள்ளையன் சுரேஷ், 'திடுக்'

Added : டிச 04, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 1 கிலோ நகையை, 'அமுக்கிய' போலீசார்:  கொள்ளையன் சுரேஷ், 'திடுக்'

திருச்சி: ''திருவாரூர் போலீசார், 1 கிலோ நகையை அமுக்கி விட்டனர்,'' என, லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த சுரேஷ் குற்றம் சாட்டினார்.

திருச்சி, லலிதா ஜுவல்லரி, சமயபுரம் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் சுரேஷ், 28, தற்போது, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 2014ல், திருச்சி, கே.கே.நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக, சுரேஷை போலீசார் நேற்று, திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நிருபர்களிடம் சுரேஷ் கூறியதாவது: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையில், என் பங்காக, 5.7 கிலோ தங்கம் கிடைத்தது. அதை எடுத்து சென்றபோது தான், திருவாரூரில், வாகன சோதனை யில் சிக்கினேன்.போலீசாரிடம் இருந்து தப்பிக்க, நகைகளை கீழே போட்டு, ஓடி விட்டேன். அவற்றை எடுத்த திருவாரூர் போலீசார், 4.7 கிலோ தங்கத்தை மட்டும் கணக்கில் காட்டி, 1 கிலோ தங்க நகைகளை அமுக்கி விட்டனர். நாங்கள் கொள்ளை அடித்த நகைகள் அனைத்தையும் கொடுத்து விட்டோம். ஆனால், நாங்கள் ஈடுபடாத கொள்ளை வழக்குகளில் தொடர்புபடுத்தி, கூடுதல் நகைகள் கேட்டு, போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201923:56:40 IST Report Abuse
தமிழ்வேல் வழுக்கிவிழப் போறான்.
Rate this:
Share this comment
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
05-டிச-201918:01:41 IST Report Abuse
R Ravikumar அதிகார பூர்வமாக கொள்ளையடிக்க ..அதிகாரி ஆக வேண்டும் .. நீதி துறை தான் கேள்வி கேட்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-டிச-201914:42:08 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிறியகொள்ளையனோ பெரிய கொள்ளையனோ மலைமுழுங்குய்யாவே இருந்தாலும் திருட்டுக்கொடுத்தவாளுக்கு ஒரு கிராம்கூட கிடைக்காதுங்க நாம்பொறக்கும் போதும் ஒருவகை மாட்டிண்டு பிறக்கலே போறச்ச ஒருகிறாம்கூட கூடவராது இது உண்மை நல்ல சீலைக்கூட காட்டுலே உருவிண்டுடுவான் என்று சொல்றாங்களே பிணத்திடமும் கொள்ளையடிப்பவர்கள் தான் இந்த கொள்ளையர்களெல்லாம் கடவுள் இவாளுக்கு தண்டனை தருவாராம் இவாலிடமே கொள்ளை அடிச்சபோலீஸுக்கு எந்த ஆண்டவன் வருவான் தண்டனை தரத்துக்கு ஏசுவா அல்லாவா பெருமாலா தெரிஞ்சால் சொல்லுங்க போனால்போகட்டும் என்று வயறு எரிஞ்சு சொல்லிண்டேபோகணும் அவ்ளோதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X