எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் துருக்கி வெங்காயம்; கிலோ ரூ.40க்கு விற்க முடிவு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ரேஷனில் துருக்கி வெங்காயம்; கிலோ ரூ.40க்கு விற்க முடிவு

மத்திய அரசு, துருக்கி நாட்டில் இருந்து, இறக்குமதி செய்யும் வெங்காயத்தை, தமிழக ரேஷன் கடைகளில், கிலோ, 40 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

நாட்டில், பெரிய வெங்காயம் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ம.பி., -- மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, தினமும் வெங்காயம், லாரிகளில் வருகிறது.தமிழக மக்கள், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும், ம.பி., - மஹாராஷ்டிரா வெங்காயத்திற்கு முன்னுரிமை தருகின்றனர். அம்மாநிலங்களில், மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல், வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், வெங்காயம் விலை, தமிழகம் உட்பட, நாடு முழுவதும், கிலோ, 150 ரூபாய் வரை விற்கப்படுவதால், பொது மக்கள், உணவக வியாபாரிகள் என, பலரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில், கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும், பண்ணை பசுமை கடைகளில், மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும், ஆந்திரா வெங்காயம், கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த வெங்காயமும், குறைந்த அளவில், கடைகளுக்கு அனுப்புவதால், அதிக மக்களால் பயன் பெற முடியவில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், அதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்கிறது. மற்ற நாடுகளை விட, துருக்கி வெங்காயம் விலை சற்று குறைவாக உள்ளது. இதனால், அந்த வெங்காயத்தை கிலோ, 62 ரூபாய்க்கு வாங்கி, தமிழக ரேஷன் கடைகளில், 40 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு அனுமதியுடன், ஒரு வாரத்திற்குள், அந்த வெங்காயம் விற்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
08-டிச-201915:19:21 IST Report Abuse
Kumar periyaar ஆட்சியாளர்கள் சரி இல்லாததால் விவசாய நாட்டிற்கு விவசாயத்தை பற்றி வொன்றும் தெரியாதவன் வெங்காயம் ஏற்று மதி செயகிறான்
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-டிச-201918:01:56 IST Report Abuse
Darmavan இதிலும் திருட்டுத்தனம் நடக்கும். நல்லது தனியார் கடைகளுக்குப்போகும் அங்குள்ள அழுகியவை ரேஷன் கடையில் விற்கும்
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
05-டிச-201915:06:21 IST Report Abuse
பிரபு ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடையில வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுமா? கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா நடக்கணுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X