பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்துணி கூட இன்றி தவிக்கிறேன்: கணவரை இழந்த பெண் பரிதவிப்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 மாற்றுத்துணி கூட இன்றி தவிக்கிறேன்: கணவரை இழந்த பெண் பரிதவிப்பு

மேட்டுப்பாளையம்: ''குடியிருக்க வீடும், மாற்றுத் துணிகளும் இல்லாமல், இரண்டு குழந்தைகளுடன், எங்கு தங்குவது என தெரியாமல் தவிக்கிறேன்,'' என, மேட்டுப்பாளையம் துயர சம்பவத்தில், கணவரை இழந்த பெண், கண்ணீர் மல்க கூறினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில், வாடகைக்கு குடியிருந்தவர், குருசாமி, 39; இவருடன் மனைவி சுதா, 30, மகன் மணிகண்டன், 11, மகள் வைஷ்ணவி, 10 ஆகியோர் வசித்து வந்தனர்.கடந்த, 1ம் தேதி இரவு பெய்த கன மழையால், காம்பவுண்ட் சுவர் இடிந்து, வீடுகள் மீது விழுந்ததில், குருசாமி உட்பட, 17 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சுதா, குழந்தைகள், உறவினர் வீட்டுக்கு சென்றதால் தப்பினர். வீடு தரை மட்டம் ஆனதால், எல்லா பொருட்களும் சேதமாகி விட்டன.வீடில்லாமல் தவிக்கும் சுதா, கண்ணீர் மல்க கூறியதாவது:நாங்கள் குடியிருந்த வீடு முற்றிலும் சேதம் அடைந்ததால், எனக்கும், குழந்தைகளுக்கும் மாற்று துணிகள் இல்லை. குடியிருக்க வீடும் இல்லாமல் வீதியில் நிற்கிறோம்.குடிக்க தண்ணீர் கூட, அடுத்தவர் வீட்டில் தான் வாங்க வேண்டியுள்ளது. என் குழந்தைகள் படிக்க புத்தகம், சீருடைகள் ஏதுமில்லை. எப்படி பள்ளிக்கு அனுப்புவது என தெரியாமல் தவிக்கிறேன். வாடகை வீடு பிடிக்கவும், பாத்திரங்கள் வாங்கவும் பணம் இல்லை. என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம்.இவ்வாறு, சுதா கூறினா

ர்.கோவை மாவட்ட கல்வி அலுவலர் ராஜலட்சுமி, பேரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர், மணிகண்டனுக்கும், வைஷ்ண விக்கும், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் ஆகியவற்றை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
08-டிச-201910:50:18 IST Report Abuse
samkey முதலமைச்சர் கொடுத்த நிவாரணம் என்ன ஆயிற்று?
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-டிச-201903:38:28 IST Report Abuse
Harinathan Krishnanandam இது போல தவிப்போருக்கு இருப்பிடம் உடை குழந்தைகள் படிப்பு வசதி போக மாதந்தோறும் ஒரு மானியம் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் மொத்த பணம் தரக்கூடாது மானியம் குறைந்த அளவாக பத்து வருடங்கள் அல்லது 20 வருடங்கள் தேவைக்கு தக்கபடி வங்கி கணக்கு மூலம் தரப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201902:54:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழக சமூகநல துறை என்ன கூந்தலை பிடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று யாராவது சொல்வார்களா? வங்கிக்கணக்கை கொடுத்தால் வாரிக்கொடுக்க நல்லுள்ளங்கள் நிச்சயம் உண்டு சகோதரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X