ஆம் ஆத்மி அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. சட்டசபை தேர்தலின் போது, தரப்பட்ட வாக்குறுதியின்படி, டில்லி மக்களுக்கு, மாதந்தோறும், 15 'ஜி.பி., டேட்டா'வுடன் இணைய வசதி இலவசமாக வழங்கப்படும். இதற்காக, டில்லி முழுவதும், 11 ஆயிரம், 'ஹாட்ஸ்பாட்' அமைக்கப்படும். வரும், 16-ம் தேதி, முதல்கட்டமாக, 100 ஹாட்ஸ்பாட்டுகள் துவக்கி வைக்கப்படும். இதன் மூலம், மக்களுக்கு இலவசமாக இணைய வசதி வழங்கப்படும்.
அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
விசாரணை இழுத்தடிப்பு
உத்தர பிரதேசத்தில் தான், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. உன்னாவ் பலாத்கார சம்பவம் பற்றி, 45 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், 80 நாட்கள் ஆகியும், விசாரணை முடியவில்லை. இந்த சம்பவத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு உள்ளது. அதனால் தான், வழக்கு பதிய தாமதம்; பின், கைது செய்ய தாமதம்; இப்போது விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது.
பிரியங்காபொதுச் செயலர், காங்கிரஸ்
தபால் அலுவலகம் அல்லநான்
அரசியல் சட்டப்படி நடப்பவன். நான், 'ரப்பர் ஸ்டாம்ப்' இல்லை. தபால் அலுவலகமும் நடத்தவில்லை. என்னிடம் வரும் மசோதாக்களை, அரசியல் சட்டம் எனக்கு அளித்து உள்ள அதிகாரத்தின் படி ஆய்வு செய்து, தாமதம் இல்லாமல், ஒப்புதல் அளித்து வருகிறேன். ஆனால், வேண்டுமென்றே தாமதம் செய்வதாக, முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டுகிறார்.
ஜக்தீப் தன்கர்கவர்னர், மேற்கு வங்கம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE