'கையை அறுத்த' எம்.எல்.ஏ., சபையில் மன்னிப்பு கேட்டார்

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement

குவஹாத்தி: அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் கையை அறுத்த, அசாம் காங்., - எம்.எல்.ஏ., ருப்ஜோதி குர்மி, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, நலிவடைந்த அரசு நிறுவனங்களை விற்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தின்போது, தன் கையை அறுத்துக் கொண்டார், காங்., - எம்.எல்.ஏ.,வான ருப்ஜோதி குர்மி. அத்துடன் ரத்தத்தால் எழுதி, தன் எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனால், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கையில் மூன்று தையல்கள் போடப்பட்டன.இந்நிலையில், சட்டசபை நேற்று மீண்டும் கூடியபோது, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார் குர்மி. அவர் கூறியதாவது:நலிவடைந்த அரசு நிறுவனங்களை விற்கும் மாநில அரசின் முடிவை, நான் தொடர்ந்து எதிர்க்கிறேன்.

அதே நேரத்தில், என் எதிர்ப்பை காட்ட, நான் மேற்கொண்ட விதம் தவறு என்பதை உணர்கிறேன். என் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.''தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு குர்மி கடிதம் கொடுத்துள்ளார்,'' என, சபாநாயகர் ஹிதேஷ் கோஸ்வாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
05-டிச-201906:07:04 IST Report Abuse
Indhuindian அவரை தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கு கொள்ள முடியாமல் மருத்துவ மனையில் சேர்த்துவிட்டது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியின் கடமையை ஆற்ற முடியால் தடுக்கும் செயல். இதை கண்டிக்க ஆளே இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X