முதல்வர் - அரசு அதிகாரிகள் கூட்டத்தில் யுவசேனா செயலர் பங்கேற்றதால் சர்ச்சை

Added : டிச 04, 2019
Advertisement

மும்பை: மஹாராஷ்டிராவில், அரசு அதிகாரிகளுடன், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சம்பந்தமில்லாமல், யுவசேனா செயலர் பங்கேற்றது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, மாநில தலைமை செயலகத்தில், உத்தவ் தாக்கரே தலைமையில், அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், சிவசேனாவின் கிளை அமைப்பான, யுவசேனாவின் செயலர் வருண் தேசாய் பங்கேற்றார். அவருடன், சட்டசபை உறுப்பினரும், உத்தவ் தாக்கரே மகன் மற்றும் யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரேவும் கலந்து கொண்டார். இதற்கு, சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப் படுகிறது. இது குறித்த தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, தேசியவாத காங்., செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், ''எந்த விதமான நிர்வாக அனுபவமும் இல்லாத ஓர் அரசு அமைந்துள்ளது; இது போல மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.கூட்டணி கட்சியே, முதல்வர் செயலை கண்டித்திருப்பது, மஹாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகள் ஆனதா?
சிவசேனாவின், 'சாம்னா' இதழில் வெளியான தலையங்கம்:'தேசியவாத காங்., ஒரு ஊழல் கட்சி' என கூறி வந்த, பா.ஜ.,வுக்கு, சரத் பவாரின் திறமையை அறிய, ஐந்து ஆண்டுகள் ஆனதா? அவரை, 'இணைந்து செயல்படலாம்' என, பிரதமர் மோடி அழைத்தது எதற்காக? தேசியவாத கட்சி, 55க்கும் குறைவான இடங்களை பிடித்திருந்தால், அந்த அழைப்பு வந்திருக்குமா? சிவசேனா பதவிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நாடகம் எல்லாம். ஆனால், உத்தவ் தாக்கரே அதை முறியடித்து, முதல்வர் ஆகிவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X