சபரிமலைக்கு செல்ல பெண்ணுக்கு மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

Updated : டிச 06, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
சபரிமலை, பெண், மறுப்பு,சுப்ரீம் கோர்ட்,அடுத்த வாரம், விசாரணை

புதுடில்லி: சபரிமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, பெண் தாக்கல் செய்துள்ள மனு மீது, உச்ச நீதிமன்றத்தில், அடுத்த வாரம் விசாரணை நடக்கிறது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, 10 வயது முதல், 50 வயதுகுட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், 'சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது. இதற்கு, அய்யப்ப பக்தர்கள் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


உத்தரவு

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, நவ., 14ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், 'சபரிமலையில் அய்யப்பனை வழிபட, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில், 'சபரி மலைக்கு வரும், 10 வயதுக்கு மேல், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது' என, கேரளாவில் ஆளும், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது.

இதையடுத்து, சபரி மலையில், மண்டல கால பூஜைகள் துவங்கிய நிலையில், சபரிமலைக்கு சென்ற, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சிலர், பாதுகாப்பு காரணங்களை கூறி, திருப்பி அனுப்பப்பட்டனர்.


அடிப்படை உரிமை

இந்நிலையில், பெண் ஒருவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்ெவஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், சபரிமலையில் அய்யப்பனை வழிபட, அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படவில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறிய செயல். மேலும் என்னை, சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன், 'உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வாங்கி வா' என கூறி, போலீசாரும், அதிகாரிகளும் அவமானப்படுத்தினர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீது, அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
05-டிச-201922:24:56 IST Report Abuse
konanki மனு தாக்கல் செய்தவர் பெயர் ஃபாத்திமா . அவருக்காக ஆஜராகும் வக்கீல் பெயர் காலின் கொன்ஸால்வஸ். இப்போது புரிகிறதா இது யாருடைய வேலை என்று?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
05-டிச-201921:00:24 IST Report Abuse
தமிழ்வேள் 1991 வரையில் இல்லாத ஆகம விதிகள் இப்போது மட்டும் எப்படி வந்தது ? சபரிமலையில் பெண்கள் வழிபட்டால் புனிதம் கெடும் என்பது சுத்த அபத்தம் 1990 வரையிலும் சோறூட்டுக்கு குழந்தையுடன் தாய்மார்களும்தானே வந்தார்கள் ? தாய் உடன் இல்லாமல் ஒரு வயது குழந்தைக்கு எப்படி சோறு ஊட்டியிருக்க இயலும் ? ஒரு வயது குழந்தையின் தாய் கருவுறும் வயதுடைய பெண்ணாகத்தானே இருந்திருக்க இயலும் ? அய்யப்பனை பெண்கள் வாசனை ஆகாத ஒரு தைவமாக சித்தரிப்பதால் என்ன நன்மை ? சபரி மலை அடர் காடாக இருந்த போது இந்த சட்டங்கள் சரியாக இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அல்ல .....பெண்களை அனுமதிக்க மறுத்து அடம் பிடிப்பதன் மூலம் இந்துக்களும் ஆபிரகாமிய மதங்கள் போன்ற பிற்போக்கு தனமுடையவர்களே என்பது நிறுவப்படும் ? பாலைவன மதங்களின் பெண்ணடிமைத்தனத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-டிச-201916:28:08 IST Report Abuse
Endrum Indian கடவுளை நம்புபவர்கள் ஒருக்காலும் இதை செய்ய மாட்டார்கள்???இப்படி செய்தால் உனக்கு இவ்வளவு பணம் கொடுக்கின்றோம் வழக்கு வந்தாலும் கூட என்று சொன்னதால் செய்யும் தினக்கூலிகள் இவர்கள் , இவர்களுக்கு கடவுள் , மதம் எல்லாம் தெரியாது, இந்த மாதிரி சமூக து(ஆ)ர்வலர்கள் பணம் கொடு என்ன என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்னும் வர்கம்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201901:07:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உண்மை தான். கடவுளை நீ முதலில் நம்பு. தப்பாக இருந்தால் அவன் தண்டிப்பான் என்று நீ நம்பி, ஒதுங்கி ஓரமாக நில்லேன். ஏன் அப்படி செய்ய மாட்டேங்குறே? ஏன்னா உனக்கே தெரியும், எல்லாம் பிராடுன்னு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X