' தமிழுக்கு சிவா... இங்கிலீசுக்கு பாலு...: சாலையோர நெரிசலுக்காக கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து பொதுமக்களை மீட்க, 'ஸ்கை வாக்' எனப்படும், வான்வழி நடைபாதைகளையும், நடைபாதை மேம்பாலங்களையும் கட்ட வேண்டும்' என, லோக்சபாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தென்சென்னைத் தொகுதி, எம்.பி.,யான தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:சென்னை பெருநகரம், முன்பிருந்ததை விட, ஏழு மடங்கு அளவுக்கு விரிவாகியிருப்பதால், நகரம் முழுக்க, போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.நகருக்குள் வந்து போகும் மக்களின் எண்ணிக்கையை தவிர்த்துவிட்டு பார்த்தாலும், ஒரு கோடி பேர் வசிக்கும் இந்நகரத்தின் மக்கள்தொகையும் அதிகரித்து வருகிறது.போக்குவரத்து அலுவலக புள்ளிவிபரத்தின்படி, ஒவ்வொரு நாளும், 3,000க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள், நகருக்குள் வருகின்றன. இவற்றால், சென்னை நகரத்தின் சாலைகள், போக்குவரத்து நெரிசலை தாங்க முடியாமல் திணறுகின்றன.

எனவே, நகரத்தின் முக்கிய சந்திப்புகளில், தரையிலிருந்து பல அடி உயரத்தில், ஸ்கை வாக் பாதைகள் அமைக்கப்பட்டு, இதில், மக்கள் நெரிசலின்றி நடந்து செல்லும் வசதிகளை உருவாக்க வேண்டும்.தவிர, சாலைகளை கடப்பதற்கு, நகரும் படிக்கட்டுகளை கொண்ட மேம்பாலங்களையும் அமைக்க வேண்டும். இவற்றை அமைக்கும்போது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிகளையும், கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

மேலும்,'சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான அனைத்துமே, தயாராக இருக்கும் நிலையில், மத்திய அரசு, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்' என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் வைத்தார்.'‛நடவடிக்கையும் நிவாரணமும் தேவை'

தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் லோக்சபாவில் பேசியதாவது:தமிழகத்தில், மேட்டுப்பாளையம் அருகே, 20 அடி உயர சுவர் இடிந்த சம்பவத்தில், 17 பேர் பலியாகியுள்ளனர்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர்களின் குடும்பங்கள், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றன.சட்டத்திற்கு புறம்பாக சுவர் எழுப்பி, அப்பாவி உயிர்கள் பலியாக காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ஐகோர்ட் பெயரை மாற்றுங்கள்'ம.தி.மு.க., - எம்.பி., வைகோ ராஜ்யசபாவில் பேசியதாவது:ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், அவற்றின் பெயர்களை வைத்தே, ஐகோர்ட்டுகள் அழைக்கப்படுகின்றன. அதுபோல, தமிழகத்திலும், சென்னை ஐகோர்ட் என்பதை, 'தமிழ்நாடு ஐகோர்ட்' என அழைக்கும் வகையில், பெயரை மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திரமோடியை, தி.மு.க., - எம்.பி.,க்கள் பாலு, கனிமொழி, சிவா ஆகியோர் நேரில் சந்தித்து மனு தந்தனர்.

அம்மனுவில், மாநில உரிமை, நீட், நதிநீர் பிரச்னை, புதிய கல்விக் கொள்கை, மதுரை எய்ம்ஸ், இலங்கை தமிழர் பிரச்னை என, 16 பிரச்னைகளை குறிப்பிட்டு, இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டுமென, குறிப்பிடப்பட்டிருந்தது.பிரதமரை சந்திப்பது பற்றி, தமிழக பத்திரிகையாளர்களுக்கு தகவல் இல்லை. ஆங்கில ஊடகங்களுக்கு, பாலு மற்றும் கனிமொழி பேட்டியளித்தனர். தமிழுக்கு தகவல் இல்லையா எனக் கேட்ட பிறகு, சிவா அனுப்பி வைக்கப்பட்டார். விசாரித்த போது, 'இனிமேல், தமிழக ஊடகங்களுக்கு சிவா தகவல் தருவார்; ஆங்கில ஊடகங்களுக்கு பாலு' என, தெரிவிக்கப்பட்டது
-- நமது டில்லி நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X