பார்லி.,யில் பா.ஜ.,வை வறுத்தெடுத்த சிவசேனா

Updated : டிச 06, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (42)
Advertisement
BJP,ShivSena,பார்லி., பா.ஜ., வறுத்தெடுத்த, சிவசேனா

புதுடில்லி: சமீபத்தில், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, பார்லி.,யில் நேற்று நடந்த விவாதத்தின்போது, தன் முன்னாள் கூட்டாளியை வறுத்து எடுத்தது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்த பேரத்தில், இந்த கூட்டணி முறிந்தது.சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்து, முதல்வரானார். இந்நிலையில், 21 ஆயிரத்து, 246 கோடி ரூபாய், பட்ஜெட் கூடுதல் செலவினங்களுக்கான மசோதா மீது லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது.

அப்போது, சிவசேனாவின். வினாயக் ராவத், மத்திய அரசை கண்டித்து கடுமையாக பேசினார். அவர் பேசியதாவது:வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, விவசாயிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர், வர்த்தகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தில்தான், அதிகளவு வாராக் கடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் பலன் காகிதத்தில் மட்டுமே உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

காங்.,கின் சசி தரூர் பேசியதாவது: நாட்டின் பொருளாதார மந்த நிலை, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும், மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.பட்ஜெட் பற்றாக்குறையைக் கூட திருத்தி அமைக்கின்றனர். பா.ஜ., அரசு தான் அளித்த எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-டிச-201917:55:46 IST Report Abuse
Malick Raja நமது நாட்டில் பொருளாதாரம் என்ற பேச்சே இருக்கக்கூடாது என்பது பாஜகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றல்லவா ?
Rate this:
Share this comment
Cancel
binakam - chennai,இந்தியா
06-டிச-201915:24:20 IST Report Abuse
binakam அமெரிக்கா ல 2008 இல் மைனஸ் 8 க்கு போன வளர்ச்சி விகிதம் ஒபாமா & டிரம்ப் காலத்தில் தான் ப்ளூஸ்க்கு வர ஆரம்பித்தது. இப்பவும் வளர்ச்சி விகிதம் எட்டிலிருந்து குறைந்து நாலுக்கு வந்திருக்கே தவிர வளர்ச்சியே இல்லை என்ற நிலைமை இந்தியாவில் இல்லை. ஸ்டாண்டர்ட் & புவர் என்கிற வெளிநாட்டு கணிப்பு நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இரு வருடம் கழித்து இந்திய பொருளாதாரம் மற்ற வளரும் பொருளாதாரத்தை மிஞ்சும் என்பது பத்திரிகை சேதி. மேலும் அதன் அறிகுறியே சென்சிடிவ் இன்டெஸ் நாற்பதாயிரத்தை தொட்டுள்ளது. அதாவது இரு வருடம் கழித்து வரும் கம்பெனி லாபத்தை இன்றே கணித்து ஷேர் மார்க்கெட்டில் உச்சத்தை அடைந்துள்ளது. இவையெல்லாம் தெரிந்தும் எதிர் கட்சி ஓலமிடுவது இந்தியாவிற்கு புதிதல்ல. binakam அளவிலிருந்து
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
05-டிச-201920:59:06 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த மந்த நிலையால் (?) யாருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். இன்னும் துணிக்கடையில், நகை கடையில், உணவகங்களில் கூட்டம் அலை மோதிக்கொண்டுதான் இருக்கிறது. வரவுக்குமீறிய செலவு செய்வதாலும், நம்மால் மாத தவணை கட்டுமளவிற்கு வருமானம் கிடைக்குமா என யோசிக்காமல் கந்து மற்றும் மீட்டர் வட்டி, அளவுக்கு மீறிய கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். உழைப்பவர்கள் என்றும் சுகமாகவே (குறைந்த வருமானமே இருந்தாலும்) வாழ்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X