கன்னையா வழக்கு உத்தரவு பிறப்பிக்க கோர்ட் மறுப்பு

Added : டிச 04, 2019
Advertisement

புதுடில்லி: தேச விரோத வழக்கில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கும்படி, டில்லி அரசுக்கு உத்தரவிட, உயர் நீதிமன்றம் மறுத்தது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்குள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலையில், 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நாட்டுக்கு எதிராக கோஷமிட்டதாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்கலை மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், 'இந்த வழக்குகளில், கன்னையா குமார் உள்ளிடோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிப்பதில், மாநில அரசு காலதாமதம் செய்கிறது; உடனடியாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நந்த கிஷோர் கர்க், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.'இந்த வழக்கில், மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X