சூடானில் விபத்து 18 இந்தியர்கள் பலி

Added : டிச 04, 2019
Share
Advertisement
கர்தோம்: வட ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில், சமையல் எரிவாயு லாரி வெடித்து சிதறியதில், 18 இந்தியர்கள் உட்பட, 23 பேர் பலியாகினர்.வட ஆப்ரிக்க நாடான சூடான் தலைநகர் கர்தோமில் உள்ள பாஹ்ரி என்ற இடத்தில், சீலா பீங்கான் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 68 இந்தியர்கள் உட்பட, பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு

கர்தோம்: வட ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில், சமையல் எரிவாயு லாரி வெடித்து சிதறியதில், 18 இந்தியர்கள் உட்பட, 23 பேர் பலியாகினர்.

வட ஆப்ரிக்க நாடான சூடான் தலைநகர் கர்தோமில் உள்ள பாஹ்ரி என்ற இடத்தில், சீலா பீங்கான் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 68 இந்தியர்கள் உட்பட, பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த சமையல் எரிவாயு லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில், 18 இந்தியர்கள் உட்பட, 23 பேர் பலியாகினர்.

மேலும், 130 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஏழு இந்தியர்களில், நான்கு பேரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.இறந்த இந்தியர்களில், தமிழர்களும் இருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்த, உண்மை நிலையை தெரிவிக்கும்படி, வெளியுறவுத் துறைக்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.அதில், காணாமல் போனவர்களை கண்டறியவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X