'2ஜி' வழக்கு விசாரணை ஜனவரியில் தனி அமர்வு

Updated : டிச 06, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (39)
Advertisement
2G,சுப்ரீம் கோர்ட்,Supreme court,2 ஜி, கனிமொழி, தகவல் தொலை தொடர்பு, அலைகற்றை,விசாரணை

புதுடில்லி: 'தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பான மனுக்களை விசாரிக்க, ஜனவரியில் தனி அமர்வு உருவாக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கியதில், மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட பலர், கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், டிசம்பர் 2017ல், ராஜா, கனிமொழி மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை, டில்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது தொடர்பான மனுக்களை விசாரிக்க, தனி அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, '2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான மனுக்களை விசாரிக்க, ஜனவரியில் தனி அமர்வு உருவாக்கப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
07-டிச-201914:44:41 IST Report Abuse
kumzi ஊழல்வாதிகள் என்று நன்கு தெரிந்துக்கொண்டும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் கூட்டத்தை என்ன சொல்வது
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
06-டிச-201911:52:22 IST Report Abuse
ganapati sb 2G வழக்கில் உத்தமர் ராசாவை மாதர் மாணிக்கம் கனிமொழியை உள்ளே தள்ளி ஜாமின் தர திமுகவிடம் 63 சட்டமன்ற தொகுதி கேட்ட சிவகங்கை சீமான் சிதம்பரம் இதற்கு என்ன சொல்வார்
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
06-டிச-201906:53:03 IST Report Abuse
rmr ஊழல் குற்றாவளிகளுக்கு குற்றம்சாட்ட பட்டவர்களும் பதவிக்கு போட்டி போட முடிவது இங்கு தான் , வேட்பாளரை பற்றி யோசிக்காமல் மக்கள் வாக்களிப்பதும் இங்கு தான் . மக்களின் அறியாமை தான் காரணம் இதை போல் ஊழல் அரசியல் வாதிகள் வளர்வதுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X