பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு மாற்று இடம் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டரின் முகாம் அலுவலகமாக மாறிய பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மாற்று இடத்தை கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., நேற்று ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து கலெக்டர் கிரண்குராலா, டி.ஆர்.ஓ., சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பேற்று பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்காலிக கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகம் இயங்குவதற்கு கச்சிராயபாளையம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகமும், அதே வளாகத்தினுள் டி.ஆர்.ஓ., அலுவலகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணிகளை கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.அதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டடத்தை பார்வையிட்டு, அங்கு பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X