விழுப்புரம் : விழுப்புரத்தில் இரண்டாம் நிலை போலீசாருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், இரண்டாம் நிலை பெண் போலீசாருக்கான உடல் திறன் தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தது. இதில், தேர்வான 550 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகியோருக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார் மற்றும் எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
மாணவிக்கு எஸ்.பி., ஆறுதல்
விழுப்புரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு வந்த கல்லுாரி மாணவி ஒருவருக்கு ஒரிஜினல் ஜாதி சான்றிதழ் இல்லை. இதனால், அலுவலர்கள் எஸ்.பி., ஜெயக்குமாரிடம் மாணவியை அழைத்து வந்தனர்.அங்கு ஜாதி சான்றிதழ் அசலை கல்லுாரி நிர்வாகம் கொடுக்க மறுத்து விட்டதாகக் கூறி மாணவி அழுதார். இதைக்கேட்ட எஸ்.பி., மாணவியிடம், நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. கல்லுாரி சென்று ஜாதி சான்றிதழ் வாங்கிக்கொண்டு, சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வழங்கினால், ஏற்றுக்கொள்வார்கள் என கூறி ஆறுதல் கூறினார்.