பொது செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக் ஸ்டிக்கர்' ஒட்ட அவகாசம்: உரிமையாளர்கள் மகிழ்ச்சி

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: -சுங்கக் கட்டணத்தை, 'டிஜிட்டல்' முறையில் செலுத்தும், 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' பொருத்த, வரும், 15ம் தேதி வரை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் தந்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில், 522 சுங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றை, 1.40 கோடி வாகனங்கள், ஒவ்வொரு நாளும் கடக்கின்றன. அவற்றிடம் இருந்து, இதுவரை சுங்கக் கட்டணம், ரொக்கமாக வசூலிக்கப்பட்டது. இம்மாதம் முதல், 'பிரீபெய்டு' முறையில், கட்டணம் செலுத்தப்பட்ட, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'களை, வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டினால், சுங்கச்சாவடிகளில் உள்ள, 'ஸ்கேனர்' கருவி வழியாக, உரிய கட்டணம் கழிக்கப்படும். இதனால், சில்லரை பிரச்னை, அதிக நேரம் வரிசையில் காத்திருப்பது உள்ளிட்ட சிரமங்கள் குறையும்.இந்த, பாஸ்டேக் ஸ்டிக்கர்கள், தேசிய வங்கிகள், சுங்கச் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு உள்ளன. ஸ்டிக்கர்களை பெற, வாகனத்தின், தொடர்ச்சி 14ம் பக்கம்பாஸ்டேக் ஸ்டிக்கர்...முதல் பக்கத் தொடர்ச்சிஆர்.சி., புக், வாகன உரிமையாளரின் புகைப்படம், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி, வைப்புத்தொகை செலுத்தி, நேரடியாகவோ, தபால் வழியாகவே பெறலாம். இந்த ஸ்டிக்கர், ஐந்தாண்டுகள் வரை, 'ரீசார்ஜ்' செய்யும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், ஒவ்வொரு வாகனத்துக்கும், தனித் தனி ஸ்டிக்கர்களை வாங்க வேண்டும்.இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை, 15ம் தேதி வரை ஒட்டிக் கொள்ளலாம் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அவ்வாறு, பாஸ்டேக் ஸ்டிக்கர் வழியாக கட்டணம் செலுத்தாதோர், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாஸ்டேக் முறை, டிச., முதல் தேதியிலிருந்து அமலாகும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்திருக்கும் கூடுதல் அவகாசத்தில், வாகன உரிமையாளர்கள், தங்களுக்கான, பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பெறுவதில், முனைப்பு காட்டி வருகின்றனர்.பாக்ஸ்/எந்த வாகனத்துக்கு எந்த ஸ்டிக்கர்?கார், ஜீப், வேன், டாடா ஏஸ் உள்ளிட்ட, இலகு ரக வாகனங்களுக்கான ஸ்டிக்கர்கள், கத்தரிப்பூ நிறத்தில் உள்ளன. மினி பஸ் உள்ளிட்ட, இலகு ரக வணிக வாகனங்களுக்கான ஸ்டிக்கர்கள், ஆரஞ்சு நிறத்தில் உள்ளன.பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான ஸ்டிக்கர்கள், பச்சை நிறத்திலும், டிரைலர் லாரிகளுக்கு, ரோஜா நிறத்திலும் உள்ளன. கனரக வாகனங்களுக்கு, ஊதா நிறத்திலும், கட்டட பொறியியல் வாகனங்கள், 'எர்த் மூவிங்' வாகனங்களுக்கு, கருப்பு நிறத்திலும், ஸ்டிக்கர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பாக்ஸ்//இதுவரை 35 சதவீதம்!தமிழகத்தில், 'பாஸ்டேக்' பதிவு செய்வதற்கான நடவடிக்கையில், வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். தற்போது வரை, மாநிலம் முழுவதும், 35 சதவீத வாகன உரிமையாளர்கள், ஸ்டிக்கர் பெற்றுள்ளனர். நாள்தோறும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் குறைந்தபட்சம், 200 பேர், தங்களது ஆவணங்களை பதிவு செய்து, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' பெற்று வருகின்றனர். இதனால், வரும், 15க்கு முன், 70 சதவீத தமிழக வாகனங்களில், 'பாஸ்டேக்' நடைமுறைக்கு வரும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X