அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல்

Added : டிச 04, 2019
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 5ஆட்டோக்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் நகர பகுதி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அனுமதியின்றி ஆட்டோக்களில் ஏற்றிச்செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 5ஆட்டோக்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் நகர பகுதி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அனுமதியின்றி ஆட்டோக்களில் ஏற்றிச்செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, முத்துக்குமார் ஆகியோர் நகரில் உள்ள தனியார் பள்ளிகள் எதிரில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதியின்றியும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் இயங்கிய 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து ஆர்.டி.ஓ., பாலகுருநாதன் கூறுகையில், 'பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் வேன்கள், வாகனங்களின் முன் மற்றும் பின் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் கவனம் தேவை என அச்சிட வேண்டும். பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் கடிதம் பெற்று வந்து, பர்மிட் சான்றிதழில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சீல் பெற வேண்டும்.அதன் பின்னர்தான் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒன்றரை மடங்கு மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். அதை மீறி கூடுதலாக ஏற்றிச்சென்றால், நடவடிக்கை எடுக்கப்படும்.தகுதி சான்று இல்லாமல் இயக்கினால், 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X