விழுப்புரம் : விழுப்புரத்தில் வெளிநாட்டு ஆந்தையை, ஆட்டோ டிரைவர்கள் மீட்டு வனச்சரகர்களிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு ஆந்தை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் கீழே விழுந்தது. இதனைப் பார்த்த அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர் ஆந்தையை மீட்டு, விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் அங்கு வந்த வனச்சரகர்கள் ஆந்தையை மீட்டனர். மேலும், பிடிபட்ட ஆந்தை இத்தாலி நாட்டை சேர்ந்தது எனவும், குணமடைந்தவுடன் காப்புக்காட்டில் விடப்படும் என்றனர்.