சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நடிகர்கள் நாடாளக் கூடாதா?

Added : டிச 04, 2019
Share
Advertisement

டாக்டர் எஸ்.அர்த்தநாரி, எம்.டி.,நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர், திராவிட கட்சிகளை சமாளிப்பரா என்பது, என் கேள்வியாக உள்ளது.

அந்த அளவுக்கு, எதிர்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் இருவரும், பல கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்ட நடிகர்கள். இவர்களை பார்த்து, அரசியல் பிழைப்பு நடத்தும் சில தலைவர்கள், தாறுமாறாக, நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது, அவர்களின் கோபத்தை காட்டுகிறது.எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்த போது, அவர் முகத்தை காட்டி, அண்ணாதுரை ஓட்டு பெற்று, ஆட்சி அமைத்தார். அவருக்கு பின், கருணாநிதி ஆட்சிக்கு வந்து, எல்லாம் தான் என்று நினைத்து, எம்.ஜி.ஆரை ஓரம் கட்டினார். இதன் விளைவு, அவர் ஆட்சியை இழந்தார்.கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது எளிதல்ல. நேர்மையாக ஆட்சி நடத்த, அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள் விட மாட்டார்கள். ஆளுமை இல்லாமல், ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம்.எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்த, முதல் ஐந்து ஆண்டுகள் நேர்மையாக ஆட்சி நடத்தினார். அதன்பின், நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், தன் நிலைமையை மாற்றிக் கொண்டார்.

அதுபோல, அரசின் எல்லா துறைகளிலும், தன் கட்சியினரை புகுத்தி, கட்சி நிதியை திரட்டினார்.மருத்துவ கல்லுாரிகள்சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாக இருந்த, இரு கர்நாடக மாநிலத்தவரை ஓரம் கட்டி, சாராய வினியோக உரிமையை, கட்சியின் மூத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுத்தார். இவ்வாறாக, வட்டம், மாவட்டம், பஞ்சாயத்து என, எல்லா கட்டமைப்பில் உள்ள கட்சியினருக்கும், சாராய வினியோக உரிமை அளித்து, பணக்காரர்களாக ஆக்கினார்.சென்னையில் இருந்தோர், தொழிலதிபர்கள் ஆயினர். மருத்துவக் கல்லுாரிகளை, தனியாரும் துவக்கலாம் என உத்தரவிட்டு, தன் கட்சியின் பிரமுகர்கள் மூன்று பேருக்கு, மருத்துவ கல்லுாரி துவக்க அனுமதி கொடுத்தார்.அது மட்டுமின்றி, எல்லா கிராமங்களிலும், எல்லா மாவட்டங்களிலும், கட்சி பதவிகளை வாரி வழங்கினார். தன் கட்சியை சேர்ந்த கூடுதல் பிரமுகர்களுக்கு கட்சி பதவிகளை கொடுப்பதற்காக, ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு அமைப்பை ஏற்படுத்தி, பல பதவிகளை வழங்கினார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட கட்சியினரின் அனுமதியும், கண்காணிப்பும் இல்லாமல், எந்த ஒரு நலத் திட்டங்களையும் வழங்க முடியாது.

அரசு வழங்கும் நிதிகளில் பெரும்பான்மை, இந்த நிர்வாகிகள் மூலமாக தான் பகிர்ந்து கொடுக்கப்படும். அதில் பாதி, கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு போய் விடும்; ஏழை, எளியவர்கள் ஏமாந்தனர்.இந்த முறைகேடுகளில், இரண்டு திராவிட கட்சிகளுக்கும் பங்கு உண்டு; இது தான் நிதர்சனம். நகரங்களில், வார்டுகளில் பொறுப்பில் உள்ள கட்சியினர் தான், கவுன்சிலராக வருவர்; கமிஷனுக்கு தயார் ஆவர்.கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கும், மாவட்ட அமைச்சர்களுக்கும், சம அதிகாரம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அரசிடமிருந்து மாவட்டத்திற்கு நேரடியாக வரும் நிதி, இந்த இருவர் சொல்லும் ஒப்பந்தக்காரர்களுக்கு தான் போகும். பெரும்பான்மையான ஒப்பந்தக்காரர்கள், அமைச்சர்களில் அல்லது மாவட்ட தலைவர் அல்லது செயலரின், 'பினாமி'யாகத் தான் இருப்பர்.மக்கள் நலனுக்காக அரசு வழங்கிய நிதியில், எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப் படுகிறது என்பது, இவர்களுக்கு தான் தெரியும்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு மாவட்டத்தின், நேர்மையான அமைச்சர், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் என்னிடம் கூறியவை இது.ஒரு மாவட்ட தலைவர், தண்ணீர் போர்டு தலைவராக இருந்த போது, வறட்சி காலத்தில், மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ததாக கூறி, 2,000 லாரிகளுக்கு பணம் கொடுக்க, பில் போட்டு, அரசுக்கு அனுப்பினார். ஆனால், 200 லாரிகள் தான், தண்ணீர் சப்ளை செய்தன.இப்படிப்பட்ட இந்த, இரண்டு திராவிட கட்சியினர்களால் தான், பல தனியார் கல்லுாரிகள் நடத்தப் படுகின்றன. 20க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகள் போன்றவற்றை இவர்கள் நடத்துகின்றனர்.நடிகர் விஜயகாந்த் நல்லவர் தான். அவரை வளர விடாமல், இரு திராவிட கட்சிகளின் தலைவர்களும் தடுத்து நிறுத்தி, அவரின் கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கி, அவரை, குடிகாரர் என, பட்டமும் சூட்டி விட்டனர்

. இப்போது நடிகர் விஜயகாந்த், நிலை குலைந்து இருக்கிறார். ஆனால், அவர் நல்லவர்.கல்வி தந்தைசுமார், 20 ஆண்டுகளுக்கு முன், திராவிட கட்சியின் இளைஞரணி தலைவர் ஒருவர், மயிலாப்பூர் குளக்கரை அருகே, ஒரு வேலையை முடிப்பதற்காக, என்னிடம், 50 ஆயிரம் ரூபாய், 'அட்வான்ஸ்' பெற்று, அந்த வேலையை முடித்து தரவில்லை. நானும் போகிறது என, விட்டு விட்டேன். ஆனால், இன்று அவர், கல்வி தந்தை என, புகழப்படுகிறார்.இப்படி, ஊழல் நிறைந்த கட்சி அமைப்பு; தரகர் நிறைந்த அரசியல் அமைப்பு; சாராய விற்பனை கூடத்தை நடத்தும் அரசு; சாராய ஆலைகளை நடத்தும் கட்சி பிரபலங்கள் மற்றும் அவர்களின், 'பினாமி'களை வளர்த்து விட்டது தான், திராவிடக் கட்சிகளின் கைங்கர்யம்.பல விதங்களில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்துள்ள கட்சிகள் தான், 'கட் - அவுட்' கலாசாரம். போஸ்டர், ஊர்வலம், கூட்டத்திற்கு பல லட்சம் செலவழிப்பது, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு, 1,000 - 2,000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குவது என, செயல்படுகின்றன.நாட்டில் பாதி மக்களுக்கு தெரியாத அமைச்சர்கள் தான், தமிழகத்தில் அதிகம் உள்ளனர். நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இருவரும், 40 ஆண்டுகள் திரை உலகில் புகழ் பெற்றவர்கள். அவர்களைப் பார்த்து, திராவிட கட்சியினர் கிண்டல் செய்வது, சூரியனை பார்த்து எதுவோ கூப்பாடு போடுவது போன்றதே!தொடர்புக்கு:இ -- மெயில்: prabhuraj.artganaree@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X