பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணை உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

Added : டிச 04, 2019
Advertisement

விக்கிரவாண்டி : வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை தொடர்ந்து அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியினை (605 மில்லியன் கனஅடி) கடந்த 2ம் தேதி எட்டியது. இதையடுத்து அன்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 3:00 மணியளவில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 300 கன அடி இருந்தது அணையிலிருந்து மூன்று ஷட்டர்கள் மூலம் 300 கன அடி தண்ணீரை வெளியேற்றினர் . பின்னர் மாலை 6:00 மணிக்கு 900 கன அடியாக நீர் வரத்து அதிகரித்ததால் அதே அளவு நீரை அணையிலிருந்து வெளியேற்றி சங்கராபரணி ஆற்றில் விட்டனர். மேலும் பாசன வாய்க்காலுக்குச் செல்லும் மதகினை திறந்து சிறிதளவு கால்வாய் வழியாகவும் உபரி தண்ணீரை வெளியேற்றினர்.தொடர்ந்து நீர் வரத்தை பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜவஹர் தலைமையில் உதவி செயற் பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன் கண்காணிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X