பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் ஏரிகரையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற எதிர்ப்பு

Added : டிச 04, 2019
Advertisement

செஞ்சி : செஞ்சியில் ஏரியில் உடைப்பு ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி நகரில் பெய்த கனமழையால் திருவண்ணாமலை சாலையில் உள்ள பீ ஏரி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்து, ஏரியின் நீர் மட்டம் உயர்ந்ததும் ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள முல்லை நகரில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.இதே போல் வடக்கு பகுதியில் பிரதான சாலையிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதற்கு முன்பு கடந்த 25 ஆண்டுகளாக ஏரியை ஆக்கிரமித்திருந்தவர்கள் ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியை 3 அடி வரை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இதனால் ஏரி நிறைந்தாலும் கடந்த ஆண்டுகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வரவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் உபரிநீர் வெளியேறும் பகுதியை 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு உயர்த்தி கட்டினர்.இதனால் இந்த ஆண்டு முல்லை நகரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே, ஏரி உபரிநீர் வெளியே செல்லும் இடத்தில் உயரத்தை உடைத்து தண்ணீரை வெளிேயற்ற வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நேற்று காலை 11:00 மணியளவில் உபரி நீர் பகுதியின் உயரத்தை குறைக்கச் சென்ற எம்.எல்.ஏ., மஸ்தான், தாசில்தார் கோவிந்தராஜ், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கனகராஜ் ஆகியோரை தடுத்து பீரங்கிமேடு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடைக்காமல் திரும்பி சென்றனர்.

நேற்று மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் உதவி கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில், தாசில்தார் கோவிந்தராசு உள்ளிட்டவர்கள் மீண்டும் ஏரியில் உடைக்கச் சென்ற போது, செஞ்சி கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பீரங்கிமேடு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை சாலையில் மறியல் செய்தனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மாற்று வழிகள் குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறினர். இதனால் மாலை 6:00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவது என முடிவு செய்து நீர் மூழ்கி மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X