பொது செய்தி

தமிழ்நாடு

'காவலன் ஆப்' பயன்படுத்த விழுப்புரம் எஸ்.பி., அறிவுரை

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : காவலன் ஆப்பை பொது மக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, ஆபத்து காலங்களில் காவல் துறையை அழைத்து பயன்பெறலாம் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:காவலன் ஆப் தமிழக காவல் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு பிரச்னை ஏற்படும்போது காவல் துறையை தொடர்பு கொள்ள 100 என்ற அவசர எண்ணுக்கு டயல் செய்வது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து, காவலன் ஆப் பதிவிறக்கம் செய்து கொண்டால், செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ்., பட்டனை அழுத்திய உடனேயே அழைப்பவரின் இருப்பிடம் ஜி.பி.எஸ்., மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, பயனாளிகளின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடமானது அழைத்தவர் பதிவு செய்துள்ள எண்களுக்கு தானாகவே பகிரப்படும்.மேலும், மொபைல் கேமரா தானாகவே இணைக்கப்பட்டு 15 விநாடிகளில் ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய வீடியோ எடுக்கப்பட்டு, அதுவாகவே காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் துறையினரின் உதவி பாதிப்புக்குள்ளாக்கப்படுபவரின் இருப்பிடம் அறிந்து செயல்பட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இச்செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. செயலியை பதிவிறக்கம் செய்து பயனாளிகள் தங்கள் அலைபேசி எண்கள், பெயர் மாற்று அலைபேசி எண்களை பதிவு செய்வதுடன் முகவரி மற்றும் மின் அஞ்சல் முகவரியையும் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், இந்த செயலியை ஒருமுறை பதிவிறக்கம் செய்து கொண்டால், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து காலங்களில் அதை உபயோகம் செய்து கொள்ளலாம். பயனாளிகள் ஆபத்தில் உள்ள போது இந்த செயலியின் மூலம் 3 பேருக்கு குறுஞ்செய்தி தகவல் அனுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது.சமீப காலங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது பரவலாக நடந்து வருகிறது. எனவே, காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியின் பயன்பாடு பெண்கள், மாணவிகளின் பாதுகாப்புக்கு நண்பனாக இருக்கும். இச்செயலியை பொதுமக்கள் மற்றும் பெண்கள், மாணவிகள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X