பொது செய்தி

தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினம்: விழுப்புரத்தில் போலீசார் சோதனை

Added : டிச 04, 2019
Advertisement
 பாபர் மசூதி இடிப்பு தினம்: விழுப்புரத்தில் போலீசார் சோதனை

விழுப்புரம் : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் ரயில்வே போலீசார் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை கடை பிடிக்கப் படுவதை யொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று மாலை 5:50 மணிக்கு, விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்திற்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியோடு, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

மேலும், தனிப்பிரிவு ஏட்டு ரவி, ஏட்டு துரைசிங்கம், காவலர்கள் அரி, ரவிசங்கர் ஆகியோர் பிளாட்பாரத்தில் உள்ள பயணிகளின் உடைமைகள், அங்கு பார்சலில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை சோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X