சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

Added : டிச 04, 2019
Advertisement

செஞ்சி : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகள் அமலா, 18; ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தார்.அமலா பெங்களூரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அமலா அப்பகுதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விபரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடந்த ஒன்றரை மாதம் முன்பு நல்லாபாளையம் கிராமத்திற்கு அழைத்து வந்து, அவரது தாய் தமிழ்ச்செல்வியுடன் தங்க வைத்தார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் மனமுடைந்த அமலா கடந்த 1ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X