விழுப்புரம் : மரக்காணம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் விஷம் குடித்து இறந்தார்.
மரக்காணம் அடுத்த எம்.திருக்கனுாரைச் சேர்ந்த நந்தகோபால், 57; கொத்தனார். இவரது மனைவி சாந்தா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நந்தகோபால் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்து நந்தகோபால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு, அங்குள்ள வயல்வெளி பகுதியில் மயங்கி விழுந்தார்.
தகவலறிந்த அவரது மகன் ஏழுமலை, தனது தந்தையை பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நந்தகோபால் இறந்தார்.மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.