பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் நிரம்பிய ஏரிகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள பல ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் குறுகிய நாட்களில் நிரம்பியுள்ளன.பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்த விவசாயிகளுக்கு, இந்த பருவமழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ், மொத்தம் 620 ஏரிகள் உள்ளன. இதில் 84 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

37 ஏரிகள் 75 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதம், 81 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும், 296 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளன.அதே போல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டுப்பாட்டின் கீழ், 1,288 ஏரிகள் உள்ளன. அதில், 190 ஏரிகளில் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 200 ஏரிகளில் 75 சதவீதமும், 255 ஏரிகளில் 50 சதவீதமும், 643 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X