தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி... மீட்கப்படுமா?

Added : டிச 04, 2019
Advertisement

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியை வனத்தோட்ட கழகத்திடமிருந்து மீட்டு இயற்கை காடுகள் அமைத்து வனவிலங்குகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட ரிஷிவந்தியம், பகண்டை, சுவாமிமலை, அவிரியூர், சித்தால், விரியூர், மேலப்பழங்கூர், அத்தியூர், கடுவனுார், கானாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவிற்கு மேல் வனப்பகுதி உள்ளது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது, இப்பகுதி முழுவதும் இயற்கை காடுகளாக இருந்தது. அப்போது மூலிகைச் செடிகள், பாரம்பரிய மரங்கள், வனவிலங்குகளின் தேவையை பூர்த்தி செய்யும் பழவகை மரங்கள் வளர்க்கப்பட்டன.

வனத்தில் வசிக்கும் மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, உடும்பு உட்பட பல்வேறு வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக குட்டைகள் வெட்டப்பட்டிருந்தன. அதிகளவு அடர்த்தியான மரங்கள் இருந்ததால் மழை பெய்து விவசாயம் செழித்தது.மொத்த பரப்பளவு கொண்ட இடத்தையும் வனத்துறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வனதோட்ட கழகத்திடம் ஒப்படைத்தது.

வனத்தோட்ட கழகம் சார்பில் வியாபார நோக்கத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யூகலிப்ட்ஸ் மரங்கள் உள்ள இடம் டிராக்டர் மூலம் உழுது பராமரிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் வளர்ச்சியடைந்ததும் அறுவடை செய்து பேப்பர் உற்பத்தி ஆலைக்கு அனுப்புவது வழக்கம்.இதனால், இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு, முழுவதும் யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்க்கப்படுவதால் வனவிலங்குகள் உணவின்றி தவிக்கின்றன. குரங்குகள் வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையிலும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

மயில் விளை நிலங்களில் சுற்றித் திரிகின்றன. உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையை கடக்கும் மான்கள் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 70 சதவீத விலங்குகள் அழிந்தன.அதுமட்டுமின்றி, வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் சமூக விரோதிகளால் விற்பனைக்காக வெட்டி கடத்தப்படுகின்றன. இதுகுறித்து தெரிந்தும் வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எனவே, வனவிலங்குகளின் நலன் கருதியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இப்பகுதியில் 50 சதவீத இடத்தை வனத்துறையினர் மீட்டு மீண்டும் இயற்கை காடுகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X