மழைநீர் ஒழுகும் பள்ளி வகுப்பறை; பின்னல்வாடியில் மாணவர்கள் அவதி

Added : டிச 04, 2019
Advertisement
மழைநீர் ஒழுகும் பள்ளி வகுப்பறை; பின்னல்வாடியில் மாணவர்கள் அவதி

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ள கட்டடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலம் உள்ளது.

உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் 580 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 180 மாணவ, மாணவிகளுக்கு 2 புதிய வகுப்பறை மற்றும் ஒரு பழைய வகுப்பறை கட்டடங்களிலும் பயின்று வருகின்றனர். இதில் பழமையான கட்டடத்தின் மேற் கூரை ஓடுகள் பெயர்ந்து விழுந்துள்ளதால் மழை பெய்தால் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் ஆசிரியர்கள் பாடம் எடுக்க முடியாலும், மாணவர்கள் படிக்க முடியாலும் அவதியடைந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஓடுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்துடனேயே உள்ளனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் வேறு வழியின்றி பாழடைந்த மழை நீர் ஒழுகும் வகுப்பறை கட்டடத்திற்குள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

இதனால் மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து பாழடைந்த வகுப்பறை கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X