பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் தின விழா

Added : டிச 04, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் வட்டார வள மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவிற்கு திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளங்கோதை தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டி, விளையாட்டு போட்டி, ஓவிய போட்டிகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.விழாவில் இயன்முறை மருத்துவர் விஜயமோகன், வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, செல்வராசு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகன், நசிரின், ஜான்சி, சத்யா, கற்பகம், ஐயப்பன், தென்றலரசு, மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X