காங்., 'மாஜி' அமைச்சர் வீட்டில் ரூ.10 கோடி மது பதுக்கலா

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஹாவேரி: பணம், மது பாட்டில்கள் பதுக்கியிருப்பதாக வந்த புகாரை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கர்நாடகத்தின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னுார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.பி.கோலிவாட் போட்டியிட்டுள்ளார்.வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவரது

ஹாவேரி: பணம், மது பாட்டில்கள் பதுக்கியிருப்பதாக வந்த புகாரை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடகத்தின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னுார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.பி.கோலிவாட் போட்டியிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவரது வீட்டில் 10 கோடி ரூபாய் ரொக்கம், மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து வருமான வரித்துறை மற்றும் கலால் துறையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வாகிஸ் நகர் ஆறாவது தெருவிலுள்ள கோலிவாட் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புகுந்தனர்.

வீட்டின் ஒவ்வொரு மூலையும் விடாமல் தீவிர சோதனை நடத்தினர். நேற்று காலை வரை சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை. பின் ஹாவேரி கலால் துறை தலைமை அதிகாரி நாகசேஷன் கூறுகையில் “மது மற்றும் பணம் பதுக்கியிருப்பதாக புகார் வந்தது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.

தகவலறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கோலிவாட் வீட்டு முன் குவிந்தனர். சோதனைக்கு பா.ஜ. அரசு தான் காரணமென கோஷமெழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201923:52:47 IST Report Abuse
தமிழவேல் இங்க வெறுமனே தேட அனுப்பி விட்டுட்டு, அவனுவோ பட்டுவாடாவை கச்சிதமா முடிச்சிருப்பானுவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X