மலட்டாறு தரைப்பாலம் சேதம் மழவராயனுார் மக்கள் அச்சம்

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : மழவராயனுார் சாலையில் உள்ள மலட்டாறு தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை பஸ் நிறுத்தத்தில் இருந்து மழவராயனுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் மலட்டாறு செல்லுகிறது.இந்த மலட்டாற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த தரைப்பாலம் தற்போது, சேதமடைந்துள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சாலை துண்டிக்கும் அபாயமும் உள்ளது.எனவே, சேதமடைந்த தரைப்பாலத்தை மாற்றி, கான்கிரீட் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X