பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற 92,000 மனு!

Updated : டிச 05, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் ''இந்த இரண்டு நிறுவனங்களிலும் விருப்ப ஓய்வு பெற 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனு கொடுத்துள்ளனர்'' என மத்திய தொலைத்
BSNL,MTNL,VRS,பி.எஸ்.என்,எல், விருப்ப ஓய்வு, ஊழியர்கள், மத்திய அரசு, 92000 பேர், மனு,எம்.டி.என்.எல்.

புதுடில்லி : மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் ''இந்த இரண்டு நிறுவனங்களிலும் விருப்ப ஓய்வு பெற 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனு கொடுத்துள்ளனர்'' என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல். எனப்படும் மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டில்லியில் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல். எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் மற்ற மாநிலங்களில் தொலை தொடர்பு சேவையை அளித்து வருகிறது.


ஆர்வம்


இந்த இரு அரசு நிறுவனங்களும் 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதையடுத்து இதில் பணிபுரியும் 50 மற்றும் 50 வயதை கடந்த ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ். எனப்படும் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை மத்திய அரசு நவம்பர் 5ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற டிச. 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அமலுக்கு வந்த நாள் முதலே விருப்ப ஓய்வு பெற பலரும் ஆர்வம் காட்டினர். இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு மத்திய அரசு 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.ஊழியர்களின் விருப்ப ஓய்வுக்குப் பின் இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அதன் சொத்துகளை விற்று மூன்றாண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்ட விருப்ப ஓய்வு திட்டம் பற்றி நேற்று லோக்சபாவில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை நாட்டின் சொத்துக்கள்.இவற்றை லாபகரமாக நடத்த வேண்டியது அரசின் கடமை.

இரண்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து லாபகரமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை நஷ்டத்தில் இயங்குவதை தடுக்கும் வகையில் விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1.5 லட்சம் பேரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் 22 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர்.


இலவச சேவை


இவர்களில் 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு சம்பள செலவில் மட்டும் 7,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இரண்டு தொலை தொடர்பு நிறுவனங்களும் இயற்கை பேரழிவு காலங்களில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களுக்கும் '4ஜி' சேவைகள் வழங்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


நஷ்ட ஈடு எவ்வளவு


விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்கள் அவர்கள் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா 35 நாள் சம்பளம் வழங்கப்படும். பணி முதிர்வு முடியும் வரை மீதியுள்ள ஆண்டுகளுக்கு தலா 25 நாள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
05-டிச-201923:19:05 IST Report Abuse
R chandar Most of the government sectors should be identified like this and announce this VRS scheme to make that organization work effectively , if possible give the work as contract basis to the good private company like (L&T, Tata) who had good reputation in the market for maintenance and operation let the control be with government with minimum services minded staff with good power of administration on uting the work as like by the public
Rate this:
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
05-டிச-201923:07:56 IST Report Abuse
Harinathan Krishnanandam அப்போது இனி நமக்கு நாமே திட்டம் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள்
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
05-டிச-201909:38:51 IST Report Abuse
Appan பிஜேபி அரசாங்கம் பொது துறைகளை மூடுகிறது.. பி.எஸ்.என்.எல் க்கு கடந்த காலங்களில் சம்பளம் கொடுக்காமல் ஊழியர்களை துன்புறுத்துகிறார்கள். பிஜேபி க்கு இது ஒருவகை வழி, பி.எஸ்.என் ஐ மூட. ஓழுங்கா சம்பளம் கொடுத்து இருந்தால், பி.எஸ்.என் எல்.ஐ மூட யூனியன்கள் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் இப்போ விட்டால் போதும் எல்லோரும் ஓட விரும்புகிறார்கள்..பிஜேபி தொடக்கத்திலே இருந்தே இதை பிளான் பண்ணி செய்தது..முதலில் 4G லைசன்ஸ் கொடுக்காமல் கம்பெனியை முடக்கினார்கள்.. 4g இருக்கும் பொது யார் 2g யை வாங்குவார்கள்.. இதனால் பி.எஸ்.என். எல் மூடும் நிலைக்கு வந்தது.. இதை யாரும் தட்டி கேட்கவில்லை.. அது சரி பிஜேபி ஏன் இப்படி செய்தது? ரிலையன்ஸ் சாதகமாக இதை செய்து இருக்கலாம்.. லட்சம் கோடி முதலீடு நல்ல செயல் பட்டு கொண்டு இருந்த பி.எஸ்.ஏன்.எல் ஐ இப்படி நாசமாக்கலாமா? இதனால் யாருக்கு நஷ்டம்.. மக்களுக்குத்தான்..இப்போ BPCL யும் விற்கிறது.. ரயில்வேயின் பெரம்பூர் ரயில் பேட்டி உற்பத்தியையும் மூடுகிறது... பெங்களுக்குள் HAL க்கு RAFLEA போர் விமானம் உற்பத்தி கொடுக்காமல் ரிலையன்ஸ்ஸிற்கு கொடுத்து அதையும் மூடும் நிலைக்கு கொண்டு வருகிறார்கள். இப்படி மூடிக்கொண்டே போனால் எப்படி பொருளாதாரம் வளரும்? நம் கண்முன்னே இப்படி நடக்கிறது..இந்த திசையில் நாடு போனால் இவ்வளவு மக்கள் தொகை உள்ள நாடு என்ன ஆகும்.. கடவுள் தான் காப்பாத்தணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X