பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம் : மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

கந்தாடு பகுதியில் இருந்து கானிமேடு, மந்தகபட்டு செல்லும் வழியில் ஓங்கூர் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தாண்டவமூர்த்திகுப்பம் ஊராட்சியில் மழையால் பாதித்த நெற்பயிர்களை, கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட, முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சுற்றுப்புறத்தையும், கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் மரக்காணம் ஊராட்சி, ஒன்றியத்திற்குட்பட்ட 56 ஊராட்சிகளுக்கு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், நான்கு விதமான ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த நான்கு வகையான தேர்தல்களில் போட்டியிட, வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு, வசதியாக போதிய இருக்கை மற்றும் மேஜை வசதிகள், மின்விசிறிகள், ஷாமியானா பந்தல், சாய்தள வசதிகள் ஆகியவை சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என, கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி, உதவி இயக்குநர் சுரேஷ், மரக்காணம் தாசில்தார் ஞானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சிவகாமி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X