நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

Updated : டிச 06, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (2)
Advertisement
PNB scam,Nirav Modi,நிரவ் மோடி, காவல், நீட்டிப்பு

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின் காவலை, அடுத்த மாதம், 2 வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் முகுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, கடந்த மார்ச் மாதம், லண்டன் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நிரவ் மோடியை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.இவரை, இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு, மே 11ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெற இருப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்து அவர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை, அடுத்த மாதம், 2 வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.


சோக்சி வழக்குக்கு தடை உயர் நீதிமன்றம் மறுப்பு


நிரவ் மேடியின் உறவினரான முகுல் சோக்சியை, வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில், முகுல் சோக்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, '100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றவர்களை, பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க சட்டத்தில் இடம் உள்ளது' என கூறி, விசாரணைக்கு தடை விதிக்க, நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
05-டிச-201914:05:21 IST Report Abuse
dandy இது ஐரோப்பிய நீதிமன்றம் ..இங்கோ செட்டி வெளியில்
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201908:09:37 IST Report Abuse
ஆப்பு அவுரு அங்கே சேஃப். இங்கே பாலியல் குற்றவாளிகள் சேஃப்.. சப் சவுக்கியம் ஹைன்... வயிறார சாப்புடுங்கோ.. ஜாலியா இருங்கோ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X