சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Added : டிச 04, 2019
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி, 44; இவர், கடந்த 2ம் தேதி சங்கராபுரத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்று ஊருக்கு திரும்பியவர் வீடு வந்து சேரவில்லை. மனைவி பெங்களூருவில் கூலி வேலை செய்துவரும் நிலையில், சங்கராபுரத்தில் இருக்கும் மகள் கவிதா, தந்தையை மொபைல்போனில் தொடர்பு கொண்டும் கிடைக்காததால் பல இடங்களில் தேடினார்.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் அருதங்குடி கிராமத்தில் உள்ள பொது கிணற்றில் சக்தியின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து, சக்தி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X