கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் அவசர சட்டம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Added : டிச 04, 2019
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் அவசர சட்டம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை: மதுரை வழக்கறிஞர் முகமது ரஸ்வி. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து, கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு நவ.,19 ல் அவசர சட்டம் கொண்டுவந்தது. இது கவுன்சிலர்கள், குதிரை பேரத்தில் ஈடுபட வழிவகுக்கும். அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நவ.,26ல் விசாரித்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மனுதாரரின் வழக்கறிஞர் நீலமேகம் நேற்று நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு முன் ஆஜராகி கூறியதாவது: வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன்,''தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன,'' என்றார். நீதிபதிகள்,'பார்த்துக்கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X