பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு; கலெக்டர் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement
 உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு; கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை, கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அடுத்த காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுற்றுப்புறத்தையும், கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், நான்கு விதமான ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இந்த நான்கு வகையான தேர்தல்களில் போட்டியிட வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வசதியாக போதிய இருக்கை மற்றும் மேஜை வசதிகள், மின்விசிறிகள், சாய்தள வசதிகள் ஆகியவை சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், கிறிஸ்டோபர் அந்தோணிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X