பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் நிரம்பும் ஏரிகள்; நீச்சல் பழகும் பள்ளி மாணவர்கள்

Added : டிச 04, 2019
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல்வேறு கிராம ஏரிகள் நிரம்பியுள்ளன.

சுங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சங்கராபுரம் பகுதியில் பூட்டை, செம்பராம்பட்டு, பொய்க்குனம், நெடுமானுார், தியாகராஜபுரம், பாண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.இதனால், ஏரியில் மாணவர்கள் நீச்சல் பயிற்சி பழகுகின்றனர். நீச்சல் தெரிந்த பெற்றோர்களின் உதவியுடன் லாரி டியூப் கொண்டு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.என்னதான் நீச்சல் தெரிந்தவர்கள் கற்றுக் கொடுத்தாலும் ஏரியில் பழகுவது என்பது ஆபத்தானது. இதை உணராமல் நீச்சல் கற்றுக் கொடுப்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X