ஜி.எஸ்.டி., இழப்பீடு உடனே வேண்டும்; எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கோரிக்கை

Updated : டிச 05, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
GST,ஜி.எஸ்.டி., இழப்பீடு,எதிர்க்கட்சி, மாநிலங்கள், கோரிக்கை

புதுடில்லி : 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மட்டும் சேவை வரி விதிப்புக்கான இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

டில்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர். அப்போது, 'ஜி,எஸ்.டி., இழப்பீட்டை, மத்திய அரசு வழங்காததால், எங்கள் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன' என, அவர்கள் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின், பஞ்சாப் மாநில நிதிஅமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான, ஜி.எஸ்.டி., இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது, அக்டோபர் - நவம்பர் மாத இழப்பீடுகளும் சேர்ந்துள்ளன. இவற்றை, உடனே வழங்க வேண்டும் என, நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும், விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil newsநிர்மலா சீதாரமனை சந்தித்த குழுவில், டில்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்களும்; கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-டிச-201906:26:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாட்டுலே எல்லாம் perfect போலிருக்கே அதான் நம்ம அரசுலேந்து யாருமேபோலியோ
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
05-டிச-201909:48:06 IST Report Abuse
Sitaraman Munisamy தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் கலந்து கொள்ள வில்லையா? அப்படியே இருந்தாலும் varavendiya thogaiyai ketka பயமா
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-டிச-201909:14:21 IST Report Abuse
ஆரூர் ரங் மாநில அரசுகள் வாக்கு வங்கியை மனதில் வைத்து வணிகர்களிடையே ஜி எஸ் டி வசூலில் முனைப்புக் காட்டாமலிருந்துவிட்டு இப்போது இழப்பீடு கேட்பது அநியாயம். மாநில அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளாமல் வரிஏய்ப்பை எப்படி தடுப்பது? போதாததற்கு ஜி எஸ் டி கவுன்சில் கூட்டங்களில் சுயநலத்துக்காக இதற்கு அதற்கு என வரிவிலக்கு வரிக்குறைப்புக்கு போராடியபோது அது ஒட்டுமொத்த வரிவருவாயைக் குறைக்கும் என்பது தெரியாமலிருந்ததா? அனாவசியமாக வரி குறைக்கப்பட்ட இனங்களின் வரியை உயர்த்த அடுத்த ஜி எஸ் டி கூட்டத்தில் வழி செய்துவிட்டு பிறகு கூடுதல் பங்கு கேட்கலாம் அதனைவிட்டுவிட்டு உலகப்பொருளாதார சரிவால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும்போது இழப்பீடு கேட்பது நியாயமாகப்படவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X