பொது செய்தி

தமிழ்நாடு

புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா

Added : டிச 04, 2019
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி சார்பில் புனரமைக்கப்பட்ட இந்து தொடக்கப்பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது.

சங்கராபுரம் இந்து தொடக்க பள்ளி கட்டட மேற்கூரை சேதமடைந்ததால் மழைக் காலங்களில் மழைநீர் ஒழுகியதால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். இது குறித்த செய்தி கடந்த மாதம் 'தினமலர்' நாளிதழில் "வெளியானது.அதனைத் தொடர்ந்து சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் சங்கராபுரம் இந்து தொடக்க பள்ளி கட்டடம் 1.15 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

இதற்கான திறப்பு விழாவிற்கு, ரோட்டரி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலர் சுதாகரன் வரவேற்றார். துணை ஆளுனர் ஆதிசேஷன், முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், திருநாவுக்கரசு, ஜெயவேல், முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், ரகுநந்தன், முர்த்தி, சவுந்தர், பலராமன், வேங்கட நாராயணன், சுரேஷ் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி மாவட்ட ஆளுனர் நடேசன் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பிரான்சிஸ்கா, ரோட்டரி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், பாண்டலம் அரிமா சங்க தலைவர் வேலு, இன்னர்வீல் கிளப் தலைவர் சுபாஷினி, ஸ்டார் கிளப் முகமது ரபி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X