சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 05, 2019
Advertisement

விருத்தாசலம் : மேட்டுப்பாளையம் தடியடி சம்பவத்தை கண்டித்து, விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் சுவர் குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் பூமாலை குமாரசாமி தலைமை தாங்கினார்.வழக்கறிஞர்கள் சிவாஜிசிங், சிவக்குமார், குமரகுரு, புஷ்பதேவன், அப்துல்லா, தனவேல், ஜெய்சங்கர், அறிவுடைநம்பி, ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X