சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துடன் பெண் தர்ணா: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

Added : டிச 05, 2019
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் காவல் நிலையம் முன், குடும்பத்துடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் திருலோகசந்தர். இவரது வீட்டு அருகில் வசிப்பவர் உறவினர் புண்ணியமூர்த்தி. இவர், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். இதில் திருலோகசந்தரின் மனைவி ஜோதிலட்சுமி மகள் நித்யஸ்ரீ ஆகியோரை புண்ணியமூர்த்தி தாக்கியதாக கடந்த மாதம் 16ம் தேதி புகார் அளித்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு ஜோதிலட்சுமியின் மகன் வெங்கடேஷ்பிரசாத்தை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அன்று இரவு காவல் நிலையம் வந்த ஜோதிலட்சுமி தனது மகனை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து வெங்கடேஷ்பிரசாத்தை போலீசார் அனுப்பினர்.இந்நிலையில், தான் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தனது மகனை காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கியதாக கூறி, ஜோதிலட்சுமி அவரது மகன் மற்றும் மகள் நித்யஸ்ரீ ஆகியோர் நேற்று காலை காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களை அழைத்து சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜீ, வெங்கடேஷ்பிரசாத்தை போலீசார் தாக்கவில்லை. ஊர் மக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. அவரை நாங்கள் காப்பாற்றி அழைத்து வந்தோம். புண்ணியமூர்த்தி மீது வழக்கு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன் பிறகு, மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X