பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர காவல் படை ரோந்து

Added : டிச 05, 2019
Advertisement

கடலுார் : பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, கடலுாரில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளாகும். அதையொட்டி கடந்த 3ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை ஆபரேஷன் 'சவுகாச்' நடைபெற்று வருகிறது.கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சிவகுருநாதன் மற்றும் ஊர்க்காவல் படையினர் கடலோர காவல் படை சகிதமாக நேற்று முன்தினம் மரக்காணம் முதல் பரங்கிப்பேட்டை வரை தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது கடலில் சந்தேகப்படும் படியான நபர்கள் படகில் வருகிறார்களா என கண்காணித்து வருகின்றனர். கடலோர மீனவ கிராமங்களுக்கு சென்று அங்கு சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் படகுகளை இயக்கினால் உடனே கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X