பொது செய்தி

தமிழ்நாடு

கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் விரயமானது

Added : டிச 05, 2019
Advertisement

சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரி நீராக கொள்ளிடத்தில் கடந்த ஐந்து நாட்களாக திறந்து விடப்பட்ட 72,000 கன அடி தண்ணீர் கடலில் கலந்து விரயமானது.

வடகிழக்கு பருவ மழை டெல்டா பகுதியில் பரவலாக பெய்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆறு மூலம் கீழணைக்கு நேற்று 14,000 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை இல்லாததால் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கீழணையில் நீர் மட்டம் 6 அடியாக உள்ளது. கீழணைக்கு வரும் தண்ணீரை அப்படியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து கடந்த 30ம் தேதி 3,000 கன அடியும், 1ம் தேதி 10,000, 2ம் தேதி 16,000, 3ம் தேதி 15,000, நேற்று 14,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கடந்த ஐந்து நாட்களில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 72,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடலில் கலந்து விரயமானது. இந்நிலையில், கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளது.வீராணம் ஏரியில் நீர் மட்டம் 46 அடியாக உள்ளது. ஏரியில் 1088 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 3,000 கன அடியாக குறைந்துள்ளது.

பொன்னேரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வடவாற்றில் தண்ணீர் தொடர்ந்து வரத்து உள்ளது. இதனால் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மற்றும் வெள்ளியங்கால் ஓடையில் தலா 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இந்த தண்ணீர் கோப்பாடி மதகில் இருந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சிதம்பரம் டெல்டா பகுதியான மாங்குடி, நந்திமங்கலம், அத்திப்பட்டு, கண்டியூர், வெண்ணையூர் போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் மூழ்கியுள்ளது.தண்ணீர் நான்கு நாட்களாக தேங்கி நிற்பதால், சூல் பயிர்களாக உள்ள சம்பா நெற் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X