அரசு பஸ் திடீர் பழுது: மாணவர்கள் அவதி

Added : டிச 05, 2019
Advertisement

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு வழியாக சென்ற அரசு பஸ் பழுதானதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதியடைந்தனர்.

கடலுாரிலிருந்து பாலுார், நடுவீரப்பட்டு, பத்திரக்கோட்டை வழியாக புதுப்பாளையம் அரசு பஸ் தடம் எண் -15 இயக்கப்பட்டு வருகிறது. காலை 8:00 மணிக்கு கடலுாரிலிருந்து வரும் இந்த பஸ்சில் தான் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதன்படி, நேற்று காலை வந்த பஸ் பல்லவராயநத்தம் அருகே பழுதாகி நின்றது. இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பள்ளி செல்லமுடியாமல் கடும் அவதியடைந்தனர். இந்த வழிதடத்தில் வேறு பஸ்கள் இயக்கப்படாததால், மாணவர்கள் அவ்வழியாக வந்த பைக் மற்றும் சைக்கிள்களில் 'லிப்ட்' கேட்டு பள்ளிக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X