பொது செய்தி

இந்தியா

எனக்கென்று தனி நாடு 'கைலாசம்': சாமியாா் நித்யானந்தா அறிவிப்பு

Added : டிச 05, 2019 | கருத்துகள் (15)
Advertisement
எனக்கென்று தனி நாடு 'கைலாசம்': சாமியாா்  நித்யானந்தா அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவை விட்டு ஓடிப்போன நித்யானந்தா தற்போது தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நாட்டுக்கு 'கைலாசம்' என பெயர் சூட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தா சர்ச்சைகள் மூலமாகவே பிரபல மடைந்தவர். இவர் மீது பக்தைகளை பலாத்காரம் செய்தது பலவந்தமாக அடைத்து வைத்தது உட்பட பல வழக்குகள் உள்ளன.

எப்போதும் கைது பீதியில் இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தனித்தீவு ஒன்றை வாங்கினார். இந்தியாவிலிருந்து தப்பியோடி இந்த தீவில் அடைக்கலம் பெற்றுள்ள இவர் இத்தீவை தனி நாடாக அறிவித்துள்ளார்.
அந்நாட்டுக்கு 'கைலாசம்' என பெயரிட்டுள்ள நித்யானந்தா இணையதளம் துவங்கி அதில் தன் நாட்டை பற்றிய விபரங்களை விவரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கைலாசம் நாட்டில் பல சிறப்புகள் உள்ளன. கோவில் ஆன்மிக வாழ்க்கை நடத்துவதற்கான வசதி உள்ளது. இங்குள்ள குடிமக்களுக்கு சிவனின் மூன்றாவது கண்ணின் பின்னால் உள்ள விஞ்ஞானம் யோகா தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது.
இங்கு குழந்தைகளுக்கு குருகுலம் போன்ற கல்வி வசதி இருக்கும். என் நாட்டின் மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை உணவு சலுகைகள் கிடைக்கும்.இது ஒரு எல்லையற்ற நாடு. தங்களின் நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உலகின் அனைத்து இந்துக்களுக்காகவே 'கைலாசம்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் குடிமக்களாக விரும்புபவர்களை வரவேற்கிறோம். இந்த நாட்டுக்கு தனி 'பாஸ்போர்ட்' வசதி உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைலாச நாட்டுக்கு தன் பக்தர் ஒருவரை பிரதமராக நித்யானந்தா நியமித்துள்ளார். இங்கு தற்போது உள்துறை பாதுகாப்பு, கல்வி, வர்த்தகம் உட்பட 10 துறைகள் செயல்படுகின்றன. இவையனைத்துக்கும் நித்யானந்தாவே அமைச்சர் என கைலாச நாட்டின் www.kailaasa.org என்ற இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நாட்டில் வழங்கப்படும் பாஸ்போர்ட் மூலம் 14 நாடுகளுக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. கைலாச நாட்டுக்கு தனிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த சிவப்பு நிறத்திலுள்ள இக்கொடியில் நித்யானந்தா சிவன் வடிவில் தியான வடிவில் தென்படுகிறார். அவர் முன் நந்தி விக்ரகம் காணப் படுகிறது.
இந்நாட்டின் தேசிய மரமாக ஆல மரமும், தேசிய விலங்காக நந்தியும் அறிவிக்கப்பட்டுள்ளன. கைலாச நாட்டுக்கு ஐ.நா. சபையில் அங்கீகாரம் பெற நித்யானந்தா முயற்சிக்கிறார்.இது குறித்து இவரது சட்ட ஆலோசகர்கள் ஐ.நா. சபையில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் நித்யானந்தா ஆசிரமம் நடத்த பள்ளி வளாகத்தில் அனுமதி அளித்த டில்லி பப்ளிக் பள்ளியின் அங்கீகாரத்தை சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ரத்து செய்திருந்தது. ஆனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டில் பள்ளி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தும் என குஜராத் கல்வித்துறை அமைச்சர் புபேந்திரசின் சுடாசமா அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
07-டிச-201921:27:38 IST Report Abuse
Anandan இவரை ஆதரிப்பது சிலர் மட்டுமே.
Rate this:
Share this comment
Tamil Selvan - Madurai,இந்தியா
08-டிச-201919:57:34 IST Report Abuse
Tamil Selvanஆமைக்கறி ஆள் மாறாட்டம் செய்தது போல இருக்கு . அந்த ஆள் மாதிரி பேசறதும் தத்து பித்து என்று வாய்க்கு வந்த மாதிரி பேசுவது . அந்த ஆள் மாதிரி அதை ரசித்து கை தட்ட ஒரு பத்து பேரு கும்பல் ....
Rate this:
Share this comment
Cancel
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
07-டிச-201920:11:56 IST Report Abuse
Senthil - Proud to be an Indian இந்தியா ல என்ன நடக்குதுன்னே தெரியலையே ...... ஒரு இந்திய பிரஜை வெளி நாட்டில் அதுவும் ஒரு தீவை வாங்கும் வரை இந்திய அரசு பார்த்துக்கொண்டு இருந்ததது....
Rate this:
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
07-டிச-201919:01:12 IST Report Abuse
Mahesh அந்த என்கவுண்டர் போலீசை அங்க அனுப்புங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X