கூடலுார்:கூடலுார் - மண்வயல் சாலை சீரமைப்பு பணியின் காரணமாக, குங்கூர்மூலா வழியில் பஸ் போக்கு வரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கூடலுார் - மண்வயல், குங்கூர்மூலா, கம்மாத்தி, நம்பாலக்கோட்டை, அத்திப்பாளி கிராம மக்கள், குங்கூர்மூலா அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தங்கள் போக்குவரத்துக்கு, கூடலுார் - மண்வயல் பஸ்சை நம்பி உள்ளனர். மற்ற நேரங்களில் ஆட்டோ, தனியார் ஜீப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதனால், பஸ் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களும், இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள், மணவர்கள் பல கி.மீ., நடந்தே சென்று, தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'சாலை சீரமைப்பு பணி காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'குங்கூர்மூலா வழியாக கூடலுார்- மண்வயல் சாலை சீரமைப்பு பணி துவங்கபபட்டுள்ளதால், புத்தூர்வயல் வழியாக, மண்வயல் பகுதிக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பணி முடியும் வரை மக்கள் ஒத்துழைப்பு அவசியம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE