சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை வேப்பூரில் 3 பேர் கைது

Added : டிச 05, 2019
Advertisement

வேப்பூர் : வேப்பூர் அருகே கஞ்சா விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன் உத்தரவின்படி, குற்றப்பிரிவு போலீசார் நேற்று வேப்பூர் பகுதியில் ரோந்து சென்றனர். பகல் 2:00 மணியளவில் கண்டப்பங்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.அதில், கொத்தனுாரைச் சேர்ந்த ராஜேந்திரன், 37; மணிகண்டன், 26; வரம்பனுாரைச் சேர்ந்த சேட்டு, 32 ஆகியோர் என்பதும், அவர்கள் 120 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.இது குறித்து, வேப்பூர் சப் - இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து, ராஜேந்திரன் உட்பட மூவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X