சிதம்பரம் அருகே ஆண் சடலம் குறித்து போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் அருகே ஆண் சடலம் குறித்து போலீஸ் விசாரணை

Added : டிச 05, 2019

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வயலில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த கூடுவெளி பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில், நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.இறந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இறந்தவர் யார் என தெரியவில்லை. சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X