இரவில் மூடப்படும் நுழைவு வரி வசூல் மையம்

Added : டிச 05, 2019
Advertisement
 இரவில் மூடப்படும் நுழைவு வரி வசூல் மையம்

கூடலுார்:தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள, நாடுகாணி நுழைவு வரி வசூல் மையம், இரவில் மூடப்பட்டுள்ளதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலுார் பகுதியில்,- கேரளா எல்லைகளில், நெடுஞ்சாலை நுழைவு பகுதிகளில், வருவாய் துறை சார்பில், நுழைவு வரி வசூல் மையம், அமைத்து, நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர்த்து, பிற மாவட்ட, மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.இப்பணிகளில், முன்பு வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இப்பணிகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு, இப்பணி முன்னாள் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கபட்டது.

இங்குள்ள, நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல் உள்ளிட்ட நுழைவு வரி வசூல் மையங்களில், நுழைவு கட்டணம் வசூல் செய்யும் பணிகளில், இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாடுகாணி வரி வசூல் மையம், காலை முதல் இரவு, 8:00 மணி வரை நுழைவு கட்டணம் வரி வசூல் செய்யப்படுகிறது.

இரவு மூடப்படும் மையம், காலை, 7:00 மணிக்கு மேல்தான் மீண்டும் திறக்கப்பட்டு, வாகன நுழைவு வரி வசூல் துவங்கிறது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. 'இம்மையத்தை, 24 மணி நேரம் திறந்து செயல்படுத்த வேண்டும்,' என, உள்ளூர் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இச்சாலை, கேரளா- - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழி தடமாகும். இதனால், எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இரவில், இம்மையம் மூடப்பட்டு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க இம்மையத்தை, முன்பு போன்று, 24 மணி நேரமும் திறந்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X